2 பிள்ளைகளின் தந்தைக்கும் மற்றொரு பெண்ணுக்கும் மலர்ந்த காதல்: உடலில் மின்சாரம் பாய்ச்சி எடுத்த முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஈரோடு மாவட்டத்தில் திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையிலும் தனது காதலை கைவி முடியாத காதரணத்தால் காதலன் தனது காதலியுன் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டார்.

சுரேஷ் என்பவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். சுரேஷ்க்கும் அப்பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது.

இது சுரேஷ்ஷின் மனைவி மாரியம்மாளுக்கு தெரியவந்ததையடுத்து, தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இருப்பினும் சுரேஷ் தனது காதலை தொடர்ந்துகொண்டுதான் இருந்துள்ளார்.

இதனால் மாரியம்மாள் கோவித்துக்கொண்டு தனது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இது சுரேஷ்க்கு நல்ல வசதியாக போய்விட்டது.

மனைவி இல்லாததால் தனக்கு தன்னை கேட்க ஆளில்லை என்றதும், சுரேஷ் அடிக்கடி ஜோதியை தனிமையில் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், ஜோதியின் கூடாநட்பு சி அவரது கணவர் சின்னசாமிக்கு தெரியவந்துள்ளது. இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சின்னச்சாமி வீட்டிலேயே இருந்ததால் ஜோதியால் சுரேஷை சந்திக்க முடியவில்லை. வழக்கம்போல சுரேஷை சந்திப்பதற்காக, தோட்டம் என்ற பகுதிக்கு ஜோதி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ், ஜோதியுடன் பேசிக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் இருவரும் அந்த இடத்தில் சடலமாக கிடந்தனர்.

பொலிசார் விசாரணையில், அங்குள்ள மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து 2 பேரும் தங்களுடைய உடலில் பாய்ச்சினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் கருகி இறந்தனர் என தெரியவந்துள்ளது.

இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers