ஏழு தமிழர்கள் விடுதலை: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா
925Shares
925Shares
ibctamil.com

சிறையில் வாடும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு 161வது விதியின் கீழ் பரிந்துரைப்பது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது.

இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து, அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்டநிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதற்கேற்ப எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இதில் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விதி எண் 161-இன்கீழ் அரசு, ஆளுநருக்கு பரிந்துரைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் தெளிவாக தமிழக அரசுக்கு, இந்த விடயத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

எனவே தமிழக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என ஜெயக்குமார் உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்