முன்னுக்குபின் முரணான தகவல்: மீன் விற்றதால் பிரபலமான கல்லூரி மாணவி விபத்தில் சதி?

Report Print Arbin Arbin in இந்தியா

திட்டமிட்டு தன்னை விபத்தில் சிக்க வைத்திருப்பதாக சந்தேகம் உள்ளது என விபத்தில் சிக்கிய மாணவி ஹனான் கூறியுள்ளார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹனான்(21). இவர் தனது குடும்ப வறுமை காரணமாக கல்லூரி சீருடையில் மாலை நேரங்களில் மீன் விற்பனை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஹனானின் இந்த செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். முதல்வர் பினராய் விஜயன் நேரில் அழைத்து அவரை கவுரவித்தார். மேலும் ஹனானை கேரள காதி வாரியத்தில் விளம்பர தூதராகவும் நியமிக்க முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஹனானின் ஏழ்மை நிலை குறித்து அறிந்த பலரும் அவருக்கு நிதி உதவி வழங்கினர். இதன்மூலம் கிடைத்த ரூ.1.5 லட்சம் பணத்தை அவர் வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்து சமூகத்திற்கு ஒரு முன் உதாரணமாக விளங்கினார்.

இதற்கிடையே, கடந்தவாரம் காரில் வந்தபோது விபத்தில் சிக்கி படுகாயத்துடன் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பில் பேசிய அவர், தான் விபத்தில் சிக்கியது ஒரு சதி திட்டமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மேலும், காலை 6 மணியளவில் விபத்து ஏற்பட்டது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு ஆன்லைன் பத்திரிகை நிருபர் மருத்துவமனைக்கு வந்தார்.

அனுமதி பெறாமலேயே சிகிச்சையை பேஸ்புக்கில் ஒளிப்பரப்பினார். மேலும், கார் ஓட்டுனரின் நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து முன்னுக்குபின் முரணாக கூறி வருகிறார்.

இதனால் விபத்து குறித்த சந்தேகங்கள் பற்றி காவல்துறையிடம் கூற உள்ளேன் என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers