மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமானதால் பரபரப்பு! குற்றவாளி யார்?

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டின் சேலத்தில் அரசு உதவி பெறும் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

மனநலம் பாதித்த இந்த சிறுமிக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை மருத்துவமனையில் அழைத்து சென்று பரிசோதித்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் குற்றவாளிகள் குறித்து அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers