7 பேர் விடுதலை: ஆளுநர் நினைத்தால் தடுக்க முடியும்! என்ன சொல்கிறது பிரிவு 161 சட்டம்?

Report Print Raju Raju in இந்தியா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

இதில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதை ஆளுநர் பரிசீலித்து முடிவு செய்யமுடியும்.

சட்டத்துக்கு எதிரான வகையில் குற்றம் இழைக்கும் குற்றவாளிகளின் தண்டனையை தள்ளுபடி செய்யவோ, ரத்து செய்யவோ 161 சட்டப்பிரிவின் படி ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பது முக்கிய விடயமாகும்.

ஆளுநர் தமிழக அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஏழு பேரையும் விடுவிக்கலாம், தனது முடிவை கிடப்பில் போடலாம், அல்லது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.

சரி என்ன சொல்கிறது 161 சட்டப்பிரிவு?
  • குற்றவாளிகள் கருணை மனு கொடுக்கும் போது அதனை பரிசீலித்து தண்டனை குறைப்பு செய்ய ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரமே பிரிவு 161.
  • எவ்வித தண்டனை பெற்றாலும் குற்றவாளி கருணை மனு கொடுத்தால் ஆளுநர் பரிசீலிக்கலாம்.
  • மனுவை ஏற்கவும், நிராகரிக்கவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு.
  • பேரறிவாளனும் இதை பயன்படுத்தியே கடந்த 2015-ல் மனு கொடுத்தார்.
  • சமீபத்தில் உச்சநீதிமன்றம் பேரறிவாளன் மனுவை பிரிவு 161-ஐ பயன்படுத்தி ஆளுநர் முடிவு செய்யலாம் என கூறியது.
தமிழக அரசுக்கே அதிகாரம் என கூறப்படுவது ஏன்?
  • உச்சநீதிமன்றம் ஆளுநரே முடிவெடுக்கலாம் என சொன்னது, நளினியின் தூக்கு தண்டனையை ஆயுளாக ஆளுநரே குறைத்தார் என்பதால் இங்கு அது சாத்தியம் என்ற வாதம் உண்டானது.
  • நளினியை விடுதலை செய்ய தமிழகம் கோரவில்லை, தண்டனை குறைப்பு மட்டுமே கேட்ட நிலையில் அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers