அபிராமிகள் உருவாக என்ன காரணம்?

Report Print Raju Raju in இந்தியா

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை அபிராமி கொன்ற விடயம் தான் தமிழக மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அபிராமி உருவாக்கப்பட்டாரா? அல்லது தானாகவே உருவானாரா? என்பதை அறிந்து கொள்ளாமல் இந்த விடயத்தில், யாராலும் ஒரு முடிவுக்கு வர இயலாது.

அபிராமிக்கு பிரியாணி அதிகம் கொடுத்து தான் அவரை கரெக்ட் செய்தேன் என கள்ளக்காதலன் சுந்தரம் வாக்குமூலம் அளித்தார்.

குழந்தைகளை கொலை செய்து விட்டு செல்ல இந்த பிரியாணி ஒன்றே காரணம் என்றால் கண்டிப்பாக இருக்காது.

இந்த கொடூர செயலை செய்ய அபிராமியை தூண்டியது எது? என்று ஆராய்ந்தால், எதிர்பாராத இடத்தில் இருந்து கிடைத்த அளவற்ற பாசம் தான் என்பதே விடையாக கிடைக்கும்.

அபிராமி தன் கணவரிடத்தில் எதிர்பார்ப்பு வளர்த்து கொண்டு ஏமாந்திருக்கலாம். அது அவருக்கும், கணவருக்கும் இடையிலான பிரச்சனை.

ஆனால் இங்கு பழி, பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகள் தாயாலேயே கொல்லப்பட்டது தான் வேதனையிலும் வேதனை.

அபிராமி தனது கணவருடன் 8 ஆண்டுகளாக காதல் பொங்க வாழ்ந்தும் வேறு நபரை அவர் நாட காரணம், தன்னுடைய உணர்ச்சிகளை சரியாக கையாள தெரியாமலும், தன்னுடைய உணர்வுகளுக்கு கணவரிடத்தில் சரியான பதில் கிடைக்காமல் போனதாலுமாக இருக்கலாம்.

ஏனெனில் கணவர்களில் பெரும்பாலானோர் காதலிக்கும் போது காதலியின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயன்றது போல கல்யாணத்துக்கு பின்னர் முயல்வதே இல்லை.

அபிராமி போன்றோர் குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு ஆரம்ப நிலையிலேயே மனநல மருத்துவர்களிடம் அழைத்து செல்லப்பட்டிருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்க முடியுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்கிறார் மருத்துவர் லதா ஜானகி.

மனநல மருத்துவர்கள் பொதுவாக தங்களிடம் வரும் நோயாளிகளிடம் பிரச்சனைகளை கேட்டு மருத்து கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

ஆனால் நிஜத்தில் பிரச்சனைகளை மருந்துகளால் தீர்க்க முடியும் என்பதை காட்டிலும் பேசிபேசி மனதை கரைத்துத்தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

அது மருத்துவர்களின் வேலை, 1 மணி நேரமானாலும் சரி பல மணி நேரமானாலும் சரி, உளவியல் பிரச்சனைகளுடன் தங்களை நாடுபவர்களை அமர வைத்து அவர்கள் பிரச்சனைகளின் ஆணிவேரை கண்டறிந்து அதை களைய முயன்றால் தான் பிரச்சனையில் இருந்து மீள முடியும்.

உளவியல் கவுன்சிலிங் என்பது மிக நிதானமான நடைமுறை. அதற்கு பொறுமையும், புரிதலும் மிக அவசியமாகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers