அமெரிக்க நாடாளுமன்றத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி: நிறைவேறிய தீர்மானம்

Report Print Kabilan in இந்தியா

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

தி.மு.க தொண்டர்கள், பொதுமக்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் பல்வேறு நாடுகளில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் கீழ்மன்ற உறுப்பினர் டேனி கே டேவிஸு, இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.

முன்னதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்