திமுகவில் இருந்து செயல் தலைவர் பதவி நீக்கம்! கட்சி விதிகளில் திருத்தம்

Report Print Kabilan in இந்தியா

தி.மு.க கட்சியில் இருந்து செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி நீக்கப்பட்டிருப்பதாக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க கட்சியில் கருணாநிதி தலைவராக செயல்பட்டு வந்தபோது, உடல்நலக்குறைவால் பொதுவாழ்வில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, செயல் தலைவர் எனும் பதவி உருவாக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கட்சியை வழி நடத்தினார்.

தற்போது, தி.மு.க-வின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை தவிர வேறு எவரும் மனுதாக்கல் செய்யாததால், ஸ்டாலின் கட்சியின் தலைவராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மு.க.ஸ்டாலின் தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஸ்டாலின் இதுவரை வகித்து வந்த ‘செயல் தலைவர்’ எனும் பதவி இனி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது. செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி 4-வது பிரிவு நீக்கப்பட்டதாக பொதுக்குழுவில் அன்பழகன் அறிவித்தார்.

அத்துடன் மாவட்ட எல்லைகளில் மாற்ற செய்ய கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட தலைமை அலுவலகங்கள் மாவட்ட தலைநகரில் இருக்க வேண்டும் என்றும், மறைந்த கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்