கருணாநிதி நினைவிடத்தில் பிரமாண்டம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தி.மு.க-வின் தலைவராக மு.க. ஸ்டாலின் இன்று ஒரு மனதாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்துகொண்டிருக்கும் தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், தி.மு.க தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஸ்டாலின் தலைவரானதைக் கொண்டாடும் வகையில், தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிவருகின்றனர்.

மேலும், கருணாநிதியின் நினைவிடத்திற்கு ஸ்டாலின் சென்று அஞ்சலி செலுத்தவிருக்கிறார்.

கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதி அதிகம் பயன்படுத்திய கறுப்பு நிறக் கண்ணாடி மற்றும் பேனா ஆகியவற்றின் பிரமாண்ட வடிவங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்