மரணயோக தினத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின்: பாதிப்புகள் வருமா?

Report Print Raju Raju in இந்தியா

சிம்ம ராசிக்காரரான மு.க ஸ்டாலினுக்கு இன்று சந்திராஷ்டமம் மற்றும் நல்ல காரியங்கள் எதுவும் இன்று செய்யக்கூடாது என்றாலும் மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்து திமுக-வின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்துக்கு கடந்த 50 ஆண்டுகளாக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் இன்று அக்கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொதுவாக இது போன்ற பெரிய பதவிகளை ஏற்பவர்கள் நல்ல நாள் பார்த்தே அதை செய்வார்கள்.

ஆனால் திராவிட கொள்கையை பின்பற்றும் ஸ்டாலின் அதை உடைத்துள்ளார்.

அதாவது, தேய்பிறை செவ்வாய்கிழமை தினமான இன்று முழுவதும் மரணயோகம்.

சிம்ம ராசி, பூரம் நட்சத்திரக்காரரான ஸ்டாலினுக்கு இன்று சந்திராஷ்டமம் ஆகும்.

நல்ல காரியங்கள் செய்வதற்கு இன்று நல்ல நாள் இல்லை என்று ஜோதிடப்படி சொல்வார்கள். ஆனால் மூட நம்பிக்கைகளை முறியடித்து தலைவராக இன்று பதவியேற்றார் ஸ்டாலின்.

அவர் தலைவராக அறிவிக்கப்பட்ட போது எமகண்ட நேரம் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்