என் கணவரை கவர்ச்சியால் மயக்கி கொன்று விட்டாள்: கதறி அழும் இளம் மனைவி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் ஆந்திராவில் நபர் ஒருவர் மர்மமாக இறந்த நிலையில் பெண்ணொருவர் தான் அதற்கு காரணம் என மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நியூடன் குமார் என்பவருக்கும் இளம் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நியூடன்குமார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். நியூடன்குமாரின் இறப்புக்கு பத்மா என்ற பெண் தான் காரணம் என அவர் மனைவி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், என் கணவர் வேலை செய்யும் இடத்தில் பத்மா என்ற பெண் உடன் வேலை செய்தார்.

நியூடன்குமாரை கவர்ச்சியை காட்டி மயக்கி பின்னர் அவரை துன்புறுத்தியுள்ளார். இதனால் பத்மா தான் அவரின் மரணத்துக்கு காரணம் என கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்