பேரனின் மரணசெய்தி கேட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பாட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரன் இறந்து வேதனையை தாங்கிகொள்ள முடியாத பாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களான கிருபாகரன், செல்வகுமார், விவேக் மூன்று பேரும் நேற்று மதியம் இப்பகுதியில் உள்ள நெய்குன்னம் வெண்ணாற்றில் குளித்திருக்கிறார்கள்.

அப்பொழுது தண்ணீரின் வேகம் திடீரென அதிகரித்ததால் மூன்று பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

உடனடியாக அம்மாபேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி தேடி கிருபாகரன், விவேக் ஆகிய இருவரின் உடல்களை மீட்டனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு செல்வகுமாரின் உடலும் மீட்கப்பட்டது.

உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கிருபாகரனின் பாட்டி, தனது பேரனை இழந்த அதிர்ச்சியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்