வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்... குத்திக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்: வெளியான பகீர் காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவமங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் ராஜாமுகமது. அவருக்கு ஆவுடையார் கோவில் அருகே ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் ரிகானா (26) என்பவருடன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளது.

இந்த நிலையில் ராஜா முகமது கடந்த வாரம் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டரசன்கோட்டையிலிருந்து தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார் ஜாஸ்மின் ரிகானா.

இந்த நிலையில் நாட்டரசன் கோட்டையை சேர்ந்த ராஜாமுகமதுவின் உறவினரான சிராஜிதீன் என்பவர் ஜாஸ்மின் வீட்டுற்கு வந்த போது அவர் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவரிடம் சிராஜிதீன் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

இதற்கு ஜாஸ்மின் எதிர்ப்பு தெரிவிக்கவே, சிராஜிதின் அங்கிருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு சிராசுதீனும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் அவரை காப்பாற்றி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கரூர் பொலிசார் ஜாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் சிராசுதீனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து விசாரணை செய்துவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்