பிணமாக கிடந்த மாணவன் அரை நிர்வாணத்துடன் ஓட்டம்! வெளியான வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

திருவள்ளூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவன் பொலிஸாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி போராட்டம் நடந்து வரும் நிலையில், மாணவன் அரை நிர்வாணமாகி ஓடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சின்ன காவனம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மௌலீஸ்வரன், அரசினர் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வருகிறான்.

கடந்த 25-ம் தேதி ரயில்வே பொலிஸார் விசாரணைக்காக மௌலீஸ்வரனை அழைத்து சென்றனர்.

ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பாத மௌலீஸ்வரன், நேற்று கும்மிடிப்பூண்டிக்கும்- எளாவூருக்கும் இடையிலான தண்டவாளத்தில் அரைநிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளான்.

விசாரணைக்காக அழைத்து சென்றுவிட்டு பொலிஸார் தான் கொலை செய்துவிட்டனர் என உறவினர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அங்கத் குமார், காவலர் வினைய் குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவன் அரை நிர்வாணமாக தப்பி ஓடுவதை போன்ற காட்சியினை ரயில்வே பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதனால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்