வெள்ளத்திற்கு முன்-பின் கேரளா எப்படி இருக்கிறது? நாசா வெளியிட்ட புகைப்படங்கள்

Report Print Kabilan in இந்தியா

கேரளா மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்தின் முன்பும், பின்பும் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தினால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கனமழையால் உண்டான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 பேர் வரை பலியாகியுள்ளனர்.

தற்போது மழைப்பொழிவு நின்றுள்ள நிலையில், அம்மாநிலத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதால், நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, கேரளாவின் பகுதிகளில் வெள்ளம் ஓடும் பகுதிகளையும், அதற்கு முன்பு அங்கு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இதில் வேப்பநாட் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியின் இரு செயற்கைக்கோள் படங்களும், ஆலப்புழா, கோட்டயம், சாங்கநேசரி மற்றும் திருவல்லா ஆகிய இடங்களும் அடங்கும்.

நாசா வெளியிட்டுள்ள இரண்டு படங்களில் முதல் படம், பிப்ரவரி 6ஆம் திகதி எடுக்கப்பட்டது. இரண்டாவது படம் ஆகஸ்ட் 22ஆம் திகதி எடுக்கப்பட்டதாகும்.

நீரின் அளவு இருண்ட நீல வண்ணத்தால் குறிக்கப்பட்டது. இரண்டாவது படத்தில் உலர் புல் நிலத்தை முற்றிலும் மூடி மறைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்