பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்த மனைவி! 19 வயது இளைஞருடன் சேர்ந்து 57 வயது கணவர் செய்த பகீர் சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனைவி பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்ததால், ஆத்திரமடைந்த கணவன், அவரை கழுத்தை நெறுத்தி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கிள்ளுக்குடியில் உள்ள பாண்டவையாற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரின் சடலம் மிதந்து வந்தது.

இதனால் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து அந்த பொலிசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் கழுத்து பகுதி துணியால் நெரிக்கப்பட்டிருந்ததால், பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது கொலையாக கூட இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பொலிசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கிள்ளுக்குடியை அடுத்த கடலாகுடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குஞ்சுபிள்ளை (57). இவருடைய மனைவி தான் மாரியம்மாள்(42) ஆற்றில் இறந்த நிலையில் மிதந்து வந்தது.

மாரியம்மாளுக்கு பல ஆண்களுடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனால் கணவரான குஞ்சுபிள்ளை இது குறித்து அவரிடம் கண்டித்துள்ளார்.

ஆனால் அவர் கேட்காமல், இருந்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆத்திரம் அடைந்த குஞ்சுபிள்ளை, தினேஷ்குமார்(19) என்ற இளைஞருடன் சேர்ந்து மாரியம்மாளின் கழுத்தை துணியால் நெரித்துக்கொலை செய்து விட்டு, உடலை பாண்டவையாற்றில் வீசி சென்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்