ஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன்: காதலியை தேவைக்காக பயன்படுத்திக்கொண்ட காதலன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் தனது காதலியின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டிய காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வர் என்பவரும், 23 வயது இளம்பெண்ணும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 25 வயதாகும் விக்னேஸ்வர், டான்ஸராக உள்ளார்.

இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார். மேலும், சினிமாவில் பெரிய டானஸராக, பணம் தேவைப்படுகிறது என்று கூறி இளம்பெண்ணிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வாங்கியுள்ளார்.

இதற்கிடையில், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, விக்னேஸ்வர், `உன்னுடைய ஆபாச படம், வீடியோ என்னிடம் இருக்கிறது. அதை வெளியிட்டு விடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலிசார் விக்னேஸ்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்