ஆதரவு அளிப்பதாக கூறி மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை! சிறுமியின் கண்ணீர் வாக்குமூலம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் வறுமையில் தவித்து வந்த சிறுமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, காவலாளி ஒருவர் மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருக்ராம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் குடும்பம், வறுமையின் காரணமாக வங்கதேசத்திற்கு புலம்பெயர்ந்துள்ளது.

எனினும், அங்கும் சிறுமியின் குடும்பம் வறுமையின் பிடியில் இருந்துள்ளது. இதனை அறிந்த முகமது ஆலம் மஞ்சார் என்பவர் சிறுமிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி, பெற்றோரின் சம்மதத்துடன் சிறுமியை டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அங்கு அறை ஒன்றில் குறித்த சிறுமியை அடைத்து வைத்து, தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் முகமது. இந்நிலையில், அங்கிருந்த தப்பி வந்த சிறுமி தனது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, முகமது ஆலம் மஞ்சார் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘முகமது ஆலம் மஞ்சார் எங்களைப் பார்க்க மே 13ஆம் திகதி வீட்டிற்கு வந்தார். எங்களது குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி, எனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறினார்.

பெற்றோர் அனுமதியுடன் என்னை அவருடன் அழைத்துச் சென்றார். நாங்கள் இருவரும் ரயிலில் டெல்லி வந்தடைந்தோம். அதன் பின்னர், குருக்ராம் பகுதியில் என்னை அழைத்துச் சென்ற அவர், நியூ பாலம் விஹார் என்ற இடத்தில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து என்னை தங்க வைத்தார்.

முகமது என்னிடம் மிகவும் கனிவாக பேசினார். உணவும் கொடுத்தார். அதனுடன், குடிக்க குளிர்பானம் ஒன்றை தந்தார். அதனை குடித்த சில நொடியில் மயக்கமாக வந்தது. அன்றே நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்.

அதன் பிறகு பலமுறை என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். பல நாள் சித்ரவதை. தினமும் மாலை நேரத்தில் தான் வருவார், வரும்போது உணவு வாங்கிக் கொண்டு வருவார். அதை சாப்பிட மறுத்தால் கொடூரமாக அடித்து சாப்பிட கட்டாயப்படுத்துவார்.

என்னை அறையின் உள்ளே வைத்து, வெளியே பூட்டிவிட்டு சென்றுவிடுவார். தொடர்ந்து பல நாட்கள் இதே நிலைமைதான். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி அன்று எதேச்சையாக கதவை திறக்க முயன்றேன்.

அப்போது முகமது பூட்ட மறந்துவிட்டு சென்றதால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பித்து விட்டேன். அதன் பிறகு, ஒருவழியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொலிசார் இதுகுறித்து கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 16. காவலாளியாகப் பணியாற்றி வரும் முகமது, சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முகமது மீது போக்ஸா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...