இறந்து போன தம்பியின் சிலைக்கு ராக்கி கட்டிய அக்கா

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியா முழுவதும் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

வடமாநிலங்களில் பிரசித்தி பெற்ற இந்த விழாவில், பெண்கள் யாரை தங்கள் சகோதரர்களாக நினைக்கிறார்களோ அவர்கள் கையில் கயிறுகளை கட்டி மகிழ்வார்கள், சகோதரர்கள் பாசமிகு சகோதரிகளுக்கு பரிசுகளை வழங்குவார்கள்.

இந்நிலையில் சட்டீஸ்கரில் இறந்து போன தம்பியின் சிலைக்கு கயிறு கட்டி பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் அக்கா.

கடந்த 2014ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ராஜேந்திர குமார் என்பவர் இறந்து போனார், இவரது அக்கா சாந்தி.

தம்பி மீது அதிக பாசம் கொண்ட சாந்தி, தம்பியின் நினைவாக சிலை ஒன்றை வைத்துள்ளார்.

இன்று ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ராக்கி கட்டி பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பான படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்