சீமானை தரையில் அமரவைத்து விசாரித்த பொலிசார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவுக்கு நிவாரணப்பொருட்களை கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிசார் தரையில் அமரவைத்து விசாரணை நடத்திய காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தமிழகத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு மழை வெள்ளத்தர்ல் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு சென்றனர்.

நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருந்ததால், பொலிசார் சந்தேகம் அடைந்தனர்.

இதனால், கோட்டயம் கிழக்கு காவல் நிலைய காவலர்களால் சீமான் உட்பட 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சீமான் உட்பட பலரை தரையில் அமரவைத்து சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய பின்னர் வாகனங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, கேரளாவில் கைது செய்யப்பட்ட சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை தரையில் அமரவைத்து கேரள பொலிசா விசாரணை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...