கேரள வெள்ளத்திற்கு கூறப்பட்ட இரண்டு மோசமான காரணங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளத்தில் 100 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு கடும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தற்போது தான் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதியுதவிகள் மூலம் நிவாரணப்பணிகளை கேரள அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

கேரளாவின் வரலாறு காணாத வெள்ளத்திற்கு காடுகளை மனிதன் அழித்து வருவது, புவிவெப்பமயமாதல் மற்றும் இயற்கையின் சீற்றம் என பல்வேறு காரணங்களை அறிவியலாளர்கள் முன்வைத்தாலும் இரண்டு மோசமான காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைய வேண்டும் என்று எண்ணியதைக் கண்டு அய்யப்பன் அடைந்த கோபமே,இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் ஆடிட்டர் குரூமூர்த்தி தெரிவித்ததற்கு பலரும் இப்படி ஒரு முட்டாள்தமான கருத்தை தெரிவித்துள்ளார் என கிண்டல் செய்து எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

அடுத்த காரணம், அகில இந்திய இந்து மதம் மகாசபா தலைவர் சுவாமி சக்கரபாணி மகாராஜா கூறியதாவது, கேரள மக்கள் அதிகமாக மாட்டு இறைச்சிகளை சாப்பிடுகிறார்கள். மாடுகளை கொன்றுகுவித்து அதனை உணவாக சாப்பிட்ட காரணத்தினாலேயே, வெள்ளத்தால் அம்மாநில மக்கள் பாதிக்கப்பட்டு மக்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்துள்ளனர்.

இதன்பிறகாவது, அம்மாநில மக்கள் மாட்டு இறைச்சியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த இரண்டு காரணங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் கண்டனங்கள் அதிகம் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...