கேரள மக்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பின்னர், தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில், தற்காலிக முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட நூறு ஆண்டுகள் கண்டிராத வெள்ளப்பெருக்கால் ஒரு லட்சத்துக்கு மேலானோர் இடம்பெயர்ந்து ஆயிரக்கணக்கான நிவாரண முகாம்களில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.

இந்நேரத்தில் பாம்புகள், தேள்கள் மற்றும் பிற பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்துகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

கேரளாவிலுள்ள பல மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களின் வீடுகளுக்கு செல்வோர் தடியை பயன்படுத்தி உடமைகளை இடம்மாற்றி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்