கேரளாவில் சீமானுக்கு எதிர்ப்பு: நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனங்கள் சிறைப்பிடிப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

கேரளாவில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்களில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருந்ததைக் காரணம்காட்டி அங்கிருந்த பாரதிய ஜனதா கட்சியினர் நிவாரணப் பொருட்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அந்தக் கட்சியினர் கேரளாவிற்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்க சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வாகனங்களை கோட்டயம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு 100 மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரிடம் 4 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருட்களில் சந்தேகம் இருப்பதால் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்