என்னை காவல்துறை சீரழித்துவிட்டது.. ஆட்சியர் அலுவலகத்தில் கதறி அழுத பெண்ணின் புகைப்படங்கள்!

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணில் கருப்பு துணி கட்டிய நிலையில், என்னை சீரழித்த காவல்துறை மீது நடவடிக்கை எடுங்க என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மஞ்சுளா என்ற பெண் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு என்னை சீரழித்த காவல் துறை மீது நடவடிக்கை எடுங்க என்று கையில் பதாகை ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியதால், அங்கிருந்த பொலிசார் அவரை குண்டு கட்டாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கழுகுன்றம் பொலிசார் மஞ்சுளா மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே உண்மை என்பது தெரியவரும், இந்த போராட்டத்தின் போது அந்த பெண் கதறி அழுதது, பொலிசார் குண்டாக தூக்கிச் சென்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...