இதய நோய் சிகிச்சைக்கான பணத்தை கேரள மக்களுக்கு அளித்த தமிழ் சிறுமி: கிடைத்த வியக்க வைக்கும் பரிசு

Report Print Arbin Arbin in இந்தியா

இதய நோய் சிகிச்சைக்கு என சேமித்து வைத்திருந்த பணத்தில் கேரள பேரிடருக்கு உதவிய தமிழ் சிறுமியை பிரபல மருத்துவமனை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுமி அக்‌ஷயா தமது சிகிச்சைக்கு என சேமித்து வைத்திருந்த பணத்தில் 5,000 ரூபாயை கேரள பெருவெள்ள பேரிடருக்கு அளித்துள்ளார்.

இந்த தகவல் சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில் கேரளாவின் புகழ்பெற்ற சித்திரை திருநாள் மருத்துவமனை, சிறுமி அக்‌ஷ்யாவின் சிகிச்சையை இலவசமாக செய்து தர முன்வந்துள்ளது.

இது சிறுமியின் நல்ல மனதுக்கு கேரளாவின் பரிசு எனவும் சித்திரை திருநாள் மருத்துவமனை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சமூக வலைதளத்தின் உதவியால் சுமார் 3 லட்ச ரூபாய் திரட்டி அப்பல்லோ மருத்துவமனையில் முதற்கட்ட அறுவை சிகிச்சை செய்துகொண்டார் அக்‌ஷயா.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக சமூக வலைதளங்கள் மூலம் அக்‌ஷயாவிற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதுவரை அக்‌ஷயாவின் அறுவை சிகிச்சைக்காக 20,000 ரூபாய் வரை நிதி பெறப்பட்டிருக்கிறது.

இதனிடையே கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைப் பார்த்த அக்‌ஷயா தன்னுடைய அறுவை சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20,000த்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை நிதி உதவியாக கேரளாவிற்கு அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்