வெள்ள நிவாரணத்திற்கு 100 கோடி திரட்ட கேரள அரசின் பலே திட்டம்

Report Print Kabilan in இந்தியா

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி திரட்ட, அம்மாநில அரசு வித்தியாசமான திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.

கேரள மாநிலம் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பலத்த சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இந்திய அரசு சார்பில் இதுவரை கேரளாவிற்கு ரூ.680 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி திரட்ட, அம்மாநில அரசு வித்தியாசமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில வருவாய்த் துறை அமைச்சர் தாமஸ் ஐசாக் கூறுகையில்,

‘வெள்ள நிவாரணப் பணிகளுக்கு என முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி திரட்ட ‘சிறப்பு லொட்டரி’ ஒன்றை விற்பனை செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

அஷ்வாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த லொட்டரியானது, ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. எத்தனை வரிசைகள் அச்சிடப்பட்டு உள்ளனவோ, அத்தனைக்கும் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

அக்டோபர் 3ஆம் திகதி குலுக்கல் நடைபெற உள்ள இந்த லொட்டரிச் சீட்டு விற்பனையின் மூலம் கிடைக்கக் கூடிய மொத்த தொகையும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து செலவுகளும் நீங்கலாக அரசுக்கு கிடைக்கும் ரூ.100 கோடியே விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட உள்ளது என மாநில வருவாய்த் துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...