கேரள வெள்ளத்தில் முதுகை படிக்கட்டாக மாற்றி உதவிய ஏழை மீனவர்: காத்திருந்த இன்ப அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

கேரள வெள்ளத்தின் போது மண்டியிட்டு படகில் ஏற பெண்களுக்கு உதவிய ஜெய்சாலுக்கு, திரைப்பட இயக்குனர் வினயன் 1,00,000 ரூபாய் பரிசாக வழங்கியுள்ளார்.

கடந்த 4 நாட்களுக்கு முன் கேரள மீனவர் ஜெய்சால் தன்னார்வல மீட்புக்குழுவுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டார்.

அப்போது பெண்களும் குழந்தைகளும் படகில் ஏற தடுமாறினர்.

உடனே மீனவர் ஜெய்சால் சற்றும் யோசிக்காமல் அவர்களுக்கு உதவும் வகையில் தனது முதுகை படிக்காட்டாக மாற்றி அதில் ஏறுவதற்கு உதவினார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவரை சந்தித்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் வினயன் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்