கேரள மக்களுக்காக வீடு வீடாக உண்டியல் ஏந்திய தமிழக சிறுவன்! கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக தமிழக மாணவன் வீடு வீடாக சென்று உண்டியல் ஏந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நசீர் உசேன். கார் மெக்கானிக்கான இவருக்கு நசீர் உசேன் என்ற மகன் உள்ளார். நசீர் அங்கிருக்கு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளம் காரணமாக கேரள மக்கள் தவிப்பதை டிவியில் கண்ட நசீர், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறி, அப்பாவிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் வீட்டின் ஏழ்மை காரணமாக அப்பாவால் நிதி தரமுடியவில்லை. இதனால் சிறுவன் கேரள மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டு என்று எண்ணி நசீர் உடனடியாக தான் வசிக்கும் இந்திரா நகர் பகுதியில் வீடு, வீடாகச் சென்று உண்டியல் ஏந்தி வசூல் செய்துள்ளார்.

அப்பகுதி மக்களும் சிறுவனின் இந்த செயலைக் கண்டு, தங்களால் இயன்ற நிதியை உண்டியலில் போட்டுள்ளனர். இதன் பயனாக 2,169 ரூபாய் கிடைத்துள்ளது.

அந்தத் தொகையை சிறுவன் கேரளாவுக்கான நிவாரண நிதியாக கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷிடம் மாணவர் முகமது சூரஜிடம் வழங்கியுள்ளான்.

மாணவனின் குணத்தை பாராட்டிய அவர், இந்த இரக்க குணத்தை காலத்துக்கும் விட்டுவிடாதே. உனக்கு எல்லா வளமும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மேலும் உயர மனமார வாழ்த்துகள் என்று பாராட்டி வாழ்த்தி அனுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers