சிதறிக்கிடந்த மல்லிகைப்பூக்கள்! பெண்களுடன் தொடர்பு.. ராணுவ வீரர் கொலையில் திடீர் திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணை விற்பனை நிலையத்தில் காவலாளியாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காட்பாடியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குமாரசாமி ஆவின் பால் பண்ணையில் காவலாளியாக பணியாற்றிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு வரவேற்பு அறையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொலிசார் கூறுகையில், குமாரசாமியும், ஆனந்தனும் மாற்றி மாற்றி செக்யூரிட்டியாக ஆவின் பால் பண்ணை விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தனர்.

அப்போது அங்கு பணியாற்றிய இரு பெண்களுடன் குமாரசாமிக்கு நட்பு ஏற்பட்டது.

விடுமுறையில் குமாரசாமி இருக்கும் நாள்களில் அந்தப் பெண்களுடன் ஆனந்தன் பழகியுள்ளார். இதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குமாரசாமியை கொல்ல திட்டமிட்ட ஆனந்தன் அவரை கொன்றுவிட்டு தப்பியுள்ளார்.

குமாரசாமி சடலம் கிடந்த இடத்தின் அருகில் மல்லிகைப் பூக்கள் சிதறிக்கிடந்தன.

ஆவின் அலுவலக அதிகாரிகளைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, மாலைகளை வாங்கி வருவதுண்டு. அவ்வாறு வாங்கி வரப்பட்ட மாலை, பூங்கொத்திலிருந்து சிதறிய மல்லிகைப் பூக்கள்தான் அவை. பூக்களைப் பார்த்ததும் முதலில் நாங்கள் வேறுவிதமாக சந்தேகித்துவிட்டோம்.

விசாரணையில்தான் மல்லிகைப் பூக்கள் குறித்த விவரம் தெரியவந்தது. குமாரசாமிக்கு தெரிந்த இரண்டு பெண்களிடம் விசாரித்தோம். அவர்களும் சில முக்கிய தகவல்களை எங்களிடம் தெரிவித்தனர். அதன்பிறகே ஆனந்தன் சிக்கினார்

மேலும் சிசிடிவி கமெரா காட்சிகள் மூலமும் ஆனந்தனை கைது செய்தோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers