கேரளாவை உலுக்கிய தாயின் வெறிச்செயல்....ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து கொலை வழக்கில் திடீர் திருப்பம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் ஒரு குடும்பத்தில் நடந்த அடுத்தடுத்த கொலையில் தொடர்புடைய தாய் சௌமியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூரை சேர்ந்த சௌமியா (27) என்பவர் தனது குடும்பத்தினருக்கு பல மாதங்களாக விஷம் கலந்துகொடுத்து அவர்களை கொலை செய்துள்ளார்.

இது கொலை என்று யாரும் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக Slow Dose விஷம் கொடுத்து வந்துள்ளார்.

இதில், ஜனவரி 31 ஆம் திகதி இவரது மகள் ஐஸ்வர்யா இறந்துள்ளார். மார்ச் 7 ஆம் திகதி தாய் கமலா மற்றும் ஏப்ரல் 13 ஆம் திகதி தந்தை குன்கிகிணான் இறந்துபோனார்.

இவர்கள் அனைவரும் இறந்துபோவதற்கு முன்னர், குமட்டல் மற்றும் அஜீரணம் பிரச்சனைகள் அறிகுறிகளாக இருந்துள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் இவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத் ஏப்ரல் 25 ஆம் திகதி சௌமியா கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சௌமியா பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், கொலைக்கான காரணத்தை தற்போதைக்கு சொல்ல இயலாது. இந்த மரணங்களுக்கு பின் இருக்கும் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படும் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சௌமியாவிடம் பலமுறை பொலிசார் விசாரணை நடத்தியும் அவர் முறையான ஒத்துழைப்பை பொலிசாருக்கு அளிக்கவில்லை.

இந்நிலையில், இன்று அவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers