கேரளாவுக்கு 600 கோடி வழங்கியது முதற்கட்ட உதவிதான்: இந்திய அரசு அறிவிப்பு

Report Print Kabilan in இந்தியா

கேரள மாநிலத்திற்கு ரூ.600 கோடி வழங்கியது முதற்கட்ட உதவி தான் என்றும், மேலும் உதவிகள் வழங்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் பெருத்த மழை, வெள்ளத்தால் நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தை சீரமைப்பதற்கு இந்தியா மட்டுமின்றி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் என வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் வந்துகொண்டு இருக்கின்றன.

அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானும், கேரள மாநிலத்திற்கு மனிதாபிமன அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் உள்துறை அமைச்சகம் கேரளாவிற்கு மேலும் உதவிகள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘பிரதமர் நரேந்திர மோடி வெள்ள சேதத்தை ஆய்வு செய்த பிறகு அறிவித்த ரூ.500 கோடி நிவாரணமும், அதற்கு முன்பு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியும் கேரள அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டது.

இது முதற்கட்ட நிவாரண உதவிதான். அடுத்தகட்டமாக மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு, கேரளத்துக்குச் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இருக்கிறது. அதன் அடிப்படையில் கேரளத்துக்கு மீண்டும் தேவைப்படும் அளவுக்கு நிதி அளிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...