மனிதனையே விழுங்கும் மலைப்பாம்பு! உயிரை பணயம் வைத்து விரட்டிய தில்லான கேரள பெண்...வைரல் வீடியோ

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மலைப்பாம்பை பெண் ஒருவர் மாப் ஸ்டிக்கை வைத்து விரட்டுவது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவில் வெள்ளத்தின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால், மக்கள் படிப் படியாக தங்களுடை அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

பல பகுதிகளில் வீடுகள் முழுமையாக மூழ்கியிருந்தது தற்போது பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் இந்த வெள்ளம் காரணமாக காடுகளிலிருந்து பாம்புகள், முதலைகள் போன்ற மிருகங்கள் அடித்து வரப்பட்டன. அவை வெள்ள நீரோடு சேர்ந்து வீட்டிற்குள் புகுந்தன. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து தற்போது ஒரு மலைப்பாம்பு கேரளாவின் குடியிருப்பு பகுதிக்குள் அடித்து வரப்பட்டது. மிகவும் நீளமாக இருக்கும் அந்த பாம்பு ஒரு ஆளையே விழுங்கும் அளவிற்கு வல்லமை கொண்டதாக உள்ளது.

அந்த பாம்பை, தனது இல்லத்திற்குள் நுழைய விடாமல் தனது உயிரைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் வெரும் மாப் ஸ்டிக்கை வைத்து பெண் ஒருவர் விரட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...