காட்டுப்பகுதியில் வேறொருவருடன் நெருக்கமாக இருந்த மனைவி! கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

நள்ளிரவில் வந்த போன் கால் மூலம் மனைவியின் தகாத உறவை கண்டுபிடித்து கொலை செய்துள்ள கணவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் கட்டட வேலைக்காக அடிக்கடி கேரளா சென்றுவிடுவது வழக்கம்.

இந்தச் சூழலில் அரிகிருஷ்ணனின் மனைவி தங்கமாரியம்மாளுக்கும், 3 குழந்தைகளுக்கு தந்தையான பெருமாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

அரிகிருஷ்ணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தினந்தோறும் மாத்திரை எடுப்பது வழக்கம். கணவன் அரிகிருஷ்ணன் கேரளாவில் இருந்து ஊருக்கு வரும்போது, தங்கமாரியம்மாள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு, பெருமாளுடன் பழகி வந்துள்ளார்.

இந்தத் தகவல் உறவினர்களுக்குத் தெரியவந்து இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் காரணமாக, கேரளாவுக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையைச் சாப்பிடவில்லை நள்ளிரவில் பெருமாள், தங்கமாரியம்மாளுக்குப் போனில் அழைத்துவிட்டு, இருவரும் வழக்கமாக சந்திக்கும் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இவர்களை அரிகிருஷ்ணன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது மட்டுமின்றி, ஆத்திரத்தில் அரிவாளால் இருவரையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு, கடம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...