மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்! மிரட்டல் விடுத்த பெண்வார்டன்களின் அதிர்ச்சி ஆடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கல்லூரி மாணவியை பேராசிரியரும், பெண் வார்டன்களும் பாலியலுக்கு அழைத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கிப்படித்து வருகிறார்.

இந்நிலையில் குறிந்த மாணவி ஆய்வறிக்கையை சமர்பிக்க சென்ற போது, கல்லூரியின் பேராசிரியரும் விடுதி கண்காணிப்பாளருமான தங்கபாண்டியன் என்பவர் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி உடனடியாக உதவி விடுதி கண்காணிப்பாளர் புனிதா மற்றும் உதவியாளர் மைதிலி ஆகியோரிடம் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர்களோ மாணவியின் புகாரைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். அதிலும் புனிதா என்பவர் கல்லூரி விடுதி என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் என்றும், மாணவிகள் தான் பொறுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி உதவி பேராசிரியர் சொல்படி கேட்டால் பெரிய ஆளாகி விடலாம் என்று கூறி, அந்த மாணவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

இதனால் பொறுமையிழந்த அந்த மாணவி உடனடியாக பெற்றோரிடம் இதைப் பற்றி கூறி கதறி அழுதுள்ளார். அதன் பின் காவல்நிலையத்தில் விடுதி கண்காணிப்பாளர் பேராசியர் தங்கபாண்டியன், மற்றும் கண்காணிப்பாளர் புனிதா ஆகியோர் தொடர்ந்து தவறான பாதைக்கு அழைத்ததாகவும், தனது படிப்பை பாதியில் நிறுத்தி வெளியில் அனுப்பி விடுவதாக மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்.

மாணவியின் குற்றச்சாட்டுக்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கல்லூரி விடுதி காப்பாளர்களான மைதிலி மற்றும் பேராசிரியை புனிதா கல்லூரி மாணவியை மிரட்டிய ஆடியோ இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...