திருமணமான சில மாதத்தில் ஏரியில் சடலமாக கிடந்த புதுமாப்பிள்ளை: மனைவி செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் அருகே ஏரிக்கரையில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (32). இவருடைய மனைவி புனிதா (26). இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

புஷ்பராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 20-ந் திகதி வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் அருகில் உள்ள ஏரிக்கரையில் புஷ்பராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் பின்னர் அவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

புஷ்பராஜ் சடலத்தை பார்த்து புனிதா கதறி அழுதார்.

இதையடுத்து புஷ்பராஜை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி புஷ்பராஜ் சடலத்தை வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் பொலிசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...