கேரள மக்களுக்கு 50 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்: கூடுதலாக செய்த நெகிழ்ச்சியான செயல்

Report Print Raju Raju in இந்தியா

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 51 லட்சம் கொடுத்ததோடு தன்னுடைய உடைமைகளையும் நடிகர் அமிதாப்பச்சன் வழங்கியுள்ளார்.

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் பெய்த கனத்த மழையால் அம்மாநில மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கேரள மக்களுக்கு நடிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பண உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அமிதாப்பச்சன் தன்னுடைய உடைமைகளை பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு வழங்கியுள்ளார்.

ஆறு பெட்டிகளில் இந்த பொருட்களை அனுப்பியுள்ளார்.

25 பேண்டுகள், 20 சட்டைகள், 80 சட்டை மேலுறைகள், 40 ஜோடி ஷூக்கள் இதில் அடக்கமாகும்.

இதோடு ரூ 51 லட்சத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...