கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையால் 364 பேர் இறந்துள்ள நிலையில், தற்போது கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயத்தை சேர்ந்த பிஜூ- மனு தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பிஜூ இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார்.பிஜூவுடன் அவரது தாய் பொன்னம்மாள் (65) என்பவரும் வசித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் பிஜூ வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்ததும் இரவு 11 மணிக்கு வீடு திரும்பினார்.

வீட்டிற்கு வந்து பார்த்தபோது விளக்கு ஏற்றாமல் இருட்டில் இருந்ததால் சந்தேகம் அடைந்த பிஜூ கதவை திறந்து பார்த்தார். அப்போது தாய், மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் ஆகியோர் இறந்து கிடந்தனர்.

குழந்தைகளை வி‌ஷ ஊசி போட்டு கொன்றுவிட்டு அதே ஊசி மூலம் மனுவும், பொன்னம்மாளும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

கந்துவட்டி கொடுமையின் காரணமாக இவர்கள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. நேற்று பிஜூ வேலைக்கு சென்றபின்னர், கந்துவட்டி கும்பல் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்துள்ளனர். இதன் காரணமாகவே, இவர்கள் நான்குபேரும் இப்படி ஒரு சோகமுடிவை எடுத்துள்ளனர்.

4 பேர் மரணத்துக்கு காரணமானவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...