பிரமாண்டமாக தயாராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்! கதாநாயகி யார் தெரியுமா?

Report Print Vijay Amburore in இந்தியா
110Shares
110Shares
lankasrimarket.com

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், பாலிவுட் நாயகி வித்யாபாலன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அரசியல் தளத்தில், தனக்கென தனிப்பெரும் பெயரை வித்திட்ட ஆளுமையான ஒரு பெண் தான் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.

தமிழகம் முழுவதும் கர்ஜித்து வந்த "உங்களால் நான், உங்களுக்காகவே நான்" என்ற ஒற்றைக்குரலுக்கு சொந்தமான பெண் சிங்கம் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியன்று உயிரிழந்தார்.

எம்ஜிஆருக்கு பின்னர் அதிமுகவை செம்மையாக வழிநடத்தி 5 முறை தமிழக முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையினை பிரமாண்டமாக இந்திய அளவில், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படமாகி தயாரிக்க உள்ளதாக விபிரி மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த படத்தின் அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் வெளியாகும் என்றும், அன்றைய தினமே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வித்யாபாலன் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்