வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதி: நடிகர் விஷால் அறிவிப்பு

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு, நடிகர் விஷால் 10 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஒட்டுமொத்த மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த மழை வெள்ளத்திற்கு இதுவரை 67க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி ஆகியோர் நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான நடிகர் விஷால், கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், திரைப்படத்துறையினர் மற்றும் ரசிகர்களிடம் தங்களால் முடிந்த உதவிகளை கேரள மக்களுக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers