மக்கள் வெள்ளத்தில் செத்துக் கொண்டிருக்க பிரபல நடிகர் இப்படி செய்யலாமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் கன மழை பெய்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஊருக்குள் ஆற்று வெள்ளம் புகுந்ததால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. நிலச்சரிவுகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து பெரும் கவலையில் இருக்கிறார்கள்.

இதுவரை கேரள வெள்ளத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுப்பதற்கு தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், நடிகர்களும் நிவாரண நிதியுதவி அளித்துள்ளனர். இந்த சோகத்துக்கு மத்தியில் நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும் தன்னுடையை ‘குட்ட நாடன் பிளாக்’ என்ற படத்தின் டிரெய்லரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துவரும் இந்த இக்கட்டான நேரத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிடலாமா? என்று மம்முட்டியை கண்டித்து கேரள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களும் மம்முட்டி செயலை விமர்சித்து உள்ளனர். மம்முட்டியும் மோகன்லாலும் தலா ரூ.25 லட்சம் வழங்கி உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers