ராசி நம்பர் இதுதான்! தலைவராக பதவியேற்க நாள் குறித்த ஸ்டாலின்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு நாளை நடைபெறவிருக்கு செயற்குழு கூட்டத்தில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்படவிருக்கிறது.

அதன்பின்னர், ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்கவிருப்பதால் வருகிற 1 ஆம் திகதி பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

ஸ்டாலின் பிறந்த தேதி மார்ச் 1. எந்தவொரு காரியத்திலும் ஒன்றாம் நம்பரை ராசியாகப் பார்க்கிறார் ஸ்டாலின். அதன் அடிப்படையில், '1-ம் தேதி கட்சியின் தலைவராகப் பதவியேற்கலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

பொதுக்குழுவுக்கு இன்னும் 17 நாள்கள் இருக்கின்றன. அதுவரையில், கழகத்தின் மாண்புகளைக் குலைக்கும் வகையில் யார் பேசினாலும், அதற்குப் பதில் கொடுக்கும் வகையில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், சமாதியில் வைத்து கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்பக்கம் இருக்கிறார்கள் என அழகிரி நெருப்பை பற்றவைத்திருப்பதால், தற்போது அது புகைய ஆரம்பித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers