உடைகிறதா திமுக? மதுரையில் ஒட்டப்பட்ட "கலைஞர் திமுக" போஸ்டர்களால் பரபரப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

முக அழகிரியின் பேட்டியை தொடர்ந்து, மதுரை முழுவதும், "கலைஞர் திமுக" என்னும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே, மெரினா அதன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

கருணாநிதி இறப்பிற்கு பின்னர் முதன்முறையாக வரும் 1-ம் தேதிக்கும் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது எனவும், அதில் கட்சி முக்கிய பதவிகள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் உடலுக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்திய அழகிரி, ஜெயலலிதா இறந்ததற்கு பின்னர் அவரது சமாதியில் ஓபிஎஸ் ஆரம்பித்த தர்ம யுத்தம் போல், தன்னுடைய பாணியில் தானும் ஒரு தர்மயுத்தத்தை ஆரம்பித்துள்ளார்.

இதனால் திமுக தொண்டர்கள் பலரும் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். கட்சியின் உண்மையான தொண்டர்கள் பலரும் என் பக்கமே உள்ளனர் என அழகிரி கூறினாலும், அன்பழகன் உட்பட பலரும் அழகிரியின் வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் வருவதாகவே கூறப்படுகிறது.

இதனால் திமுக வட்டாரமே பரபரப்பாக இருந்து வரும் நிலையில், மதுரை முழுவதும் "கலைஞர் திமுகவின் பொதுச்செயலாளரே" என அழகிரி மற்றும் அவரது மகனை குறிக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்