காவேரி மருத்துவமனையில் நடந்த சுவாரசியம்! நர்சுகளை அசர வைத்த கருணாநிதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார்.

நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு அவரது அருகில் இருப்பவர்களை சிரிக்கச் செய்துவிடும்.

இந்நிலையில் தான் 2016 ஆம் ஆண்டு காவேரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது அங்கிருந்த செவிலியர்களிடம் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு தண்ணீர் அதிகம் கொடுக்கக் கூடாது என்று அவரை கவனித்துக் கொண்டிருந்த நர்சுகளுக்கு டாக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

அதனால் தொடர்ந்து கருணாநிதி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டும் பணியில் இருந்த செவிலியர் தண்ணீர் கொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அந்தசெவிலியரை அழைத்த கருணநிதி , இத்தனை தடவை தண்ணீர் கேட்டும் நீ கொடுக்கவில்லையே ! உன் பேரென்ன காவேரியா ? என கேட்டு தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers