பாலியல் தொல்லை விவகாரம்: நடிகை ஆண்ட்ரியா கூறுவது என்ன?

Report Print Kavitha in இந்தியா

தற்போது பிசியாக நடித்துவரும் நடிகைகளில் ஒருவர் தான் ஆண்ட்ரியா.

சமீபத்தில் இவர் கமலுடன் நடித்திருந்த விஸ்வரூபம் 2 வெளியாகி உள்ளது மற்றும் தனுஷுடன் வெற்றிமாறன் கதையில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

திரையுலகில் நடிக்க வரும் நடிகைகள் பலருக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக சமீபகாலமாக சில நடிகைகள் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஆண்ட்ரியா கூறியதாவது:

சினிமாவில் நடிக்க வந்ததிலிருந்து பாலியல் விவகாரம் தொடர்பான பிரச்சனை எதையும் நான் எதிர்கொண்டதில்லை. அதுபோன்ற சம்பவம் நடந்தது உண்மையென்றால் அதை நிச்சயம் உறுதியான மனதுடன் வெளிப்படுத்த வேண்டும். வெளிப்படையாக அதுபோன்ற சம்பவங்களை சொல்வதுதான் சரியானது. அதற்கு பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...