அழகிரி ஒரு போட்டியே கிடையாது... முடிந்ததை பார்க்கட்டும்! ஸ்டாலின் அதிரடி

Report Print Vijay Amburore in இந்தியா

திமுகவின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அழகிரி- ஸ்டாலின் இடையேயான கருத்து மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இறந்த பின்னர், முதன்முறையாக நாளை திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்ள உள்ள ஏராளமான செயற்குழு உறுப்பினர்கள், இறந்த திமுக தலைவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். அதன்பின்னர், பொதுக்குழுவை கூட்டுவதற்கான தேதியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது, தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்றில் ஒரு பதவியை எனக்கு வழங்க வேண்டும் என கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அதற்கு நிர்வாகிகள் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கனிமொழிக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறி வருகின்றனராம்.

இந்த நிலையில் இன்று காலை மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அழகிரி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது, 'கலைஞரின் விசுவாசமிக்க உடன்பிறப்புகள் என்னுடன்தான் இருக்கின்றனர். என்னுடைய ஆதங்கத்தைத் தெரிவிக்கவே வந்தேன்' என கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

திமுக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக அறிவாலய நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஸ்டாலினுக்கு பிறகு கட்சியில் கனிமொழி முக்கியத்துவம் பெற்றுவிட கூடாது என அழகிரி நினைக்கிறார். அவருக்கு செல்வியின் ஆதரவும் அதிகமாகவே உள்ளது.

அதேசமயம் நிர்வாகிகள் ஒரு சிலர், அழகிரியை கட்சியில் சேர்த்தால், நிர்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, அவர் வைத்து தான் சட்டம் என்பது போல் செயல்படுவார் எனவும் கூறி வருகின்றனர்.

இதையெல்லாம் உற்று கவனித்த ஸ்டாலின், கலைஞரால் நீக்கப்பட்ட அழகிரியை சேர்ப்பதால் என்னுடைய தலைமை தான் கேள்விக்குறியாகும். எனக்கு அவர் ஒன்னும் போட்டியே இல்லை. அழகிரி ஒன்னும் தவிர்க்க முடியாதவரும் அல்ல.

அவரால் முடிந்ததை பார்த்துக் கொள்ளட்டும். என்னுடைய கவனம் எல்லாம் தற்போது நாடாளுமன்ற தேர்தல் மேல் தான் உள்ளது என கூறியுள்ளதாக நிர்வாகிகள் வட்டாரம் தெரிவிக்கின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers