கருணாநிதி வீட்டுக்கு அழகிரி வந்த போது ஸ்டாலின் செய்த செயல்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்குள் மு.க அழகிரி நுழைந்த போது, ஸ்டாலின் வழிவிட்டு ஒதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் கட்சியின் அடுத்த தலைமை யாருக்கு என்பதில் மு.க ஸ்டாலினுக்கும், மு.க அழகிரிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

அழகிரி சற்றுமுன்னர் அளித்த பேட்டியில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு அழகிரி வந்தார்.

அப்போது வீட்டுக்குள் அவர் நுழையும் போது மு.க ஸ்டாலின் வழிவிட்டு ஒதுங்கி நின்றார்.

அழகிரியை பார்ப்பதை தவிர்க்கவே ஸ்டாலின் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்