அழகிரி குறிப்பிட்ட அந்த ஒற்றை வார்த்தையின் அர்த்தம் என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக கட்சியில் இருந்து அழகிரி 2014 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பின்னர் அவர் அரசியலில் இருந்து விலகிவிடுவார் என கூறப்பட்டது.

ஆனால், கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் குறிப்பாக நாளை செயற்குழு கூட்டம் கூடவிருக்கின்ற நிலையில், அரசியல் குறித்து அழகிரி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதியின் விசுவாசிகள் என்பக்கம் இருக்கிறார்கள் என்றும் எனது ஆதங்கத்தை தந்தையிடம் தேடிக்கொண்டேன், அது என்ன ஆதங்கம் என்பது உங்களுக்கு புரியாது என கூறியுள்ளார்.

அப்படியென்ன அழகிரியின் ஆதங்கம் என்றால், மதுரையில் மீண்டும் தான் கோலோச்ச வேண்டும், தன்னுடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவி வழங்காதது, மீண்டும் தன்னை கட்சியில் சேர்ப்பது குறித்து யோசிக்காதது என்று பல விடயங்களை அந்த ஆதங்கம் என்ற ஒற்றை வார்த்தையில் அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

கருணாநிதியின் இறப்பிற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் ஒன்றுசேர்ந்திருந்த அழகிரி- ஸ்டாலின் உறவில் மீண்டும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers