ஆசிரியரின் கொடூரமான தாக்குதலால் மயங்கி விழுந்த மாணவி: அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Report Print Vijay Amburore in இந்தியா

ஜெய்ப்பூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில், படிக்கும் மாணவியை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் மாநிலம் டவுசா மாவட்டத்தில் உள்ள தீவானா கிராமத்தில் Swami Vivekanand Model School செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த Jagmohan Meena என்பவர், தண்ணீர் குடித்துவிட்டு தாமதமாக வந்த மாணவி ஒருவரின் முடியை பிடித்து கொடூரமாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் சிறிது நேரத்திலேயே மனைவி மயக்கமடைந்து வகுப்பறையில் சுருண்டு விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்ட சக மாணவிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த மாணவி என்ன நடந்தது என்பதை விவரமாக தன்னுடைய பெற்றோரிடத்தில் கூறியுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் உட்பட உயர்மட்ட கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதால் தீவிரமான நடவடிக்கை எடுக்கும் வேளைகளில் கல்வி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers