கருணாநிதி வீட்டு அறையில் உள்ளது இதுதான்: இறப்புக்கு பின் முதல்முறையாக சென்ற வைரமுத்து உருக்கம்

Report Print Raju Raju in இந்தியா

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, அவரது வீட்டுக்கு கனத்த இதயத்துடன் சென்றதாக கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த 7-ம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது மறைவுக்குப் பின் கோபாலாபுர இல்லத்துக்கு கவிஞர் வைரமுத்து நேற்று சென்றார்.

அங்கு ஸ்டாலினை வைரமுத்து சந்தித்த பின்னர் பேசுகையில், கருணாநிதி மறைந்த பிறகு முதல் முதலாக அவர் இல்லாத வீட்டுக்குள் நுழைகிறோம் என்ற கனத்த மனத்தோடு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே நுழைந்து ஸ்டாலின் மற்றும் நண்பர்களோடு அமர்ந்திருந்த போது எனக்கு ஒன்று தோன்றியது. கருணாநிதியின் எண்ணங்கள் இந்த வீட்டுக்குள் நிறைந்திருக்கின்றன. அவரது மூச்சு, சுவாசம் இந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நிறைந்திருக்கிறது.

கருணாநிதியின் தமிழ் குறித்தும், அவரது தொண்டுகள் குறித்தும் யாருக்கும் மறதிகள் வரப்போவதில்லை. அவரை என்னால் மறக்க முடியவில்லை என உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers