பிரபல நடிகர் மரணம்: சடலத்தை பார்த்து கதறிய திரையுலகினர்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல மூத்த நடிகர் படல் தாஸ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அசாம் மொழி திரைப்படங்கள் பலவற்றில் கதாநாயகனாகவும், குணச்சித்தர வேடத்திலும் நடித்து மக்களிடையே புகழ்பெற்றார் தாஸ்.

சில காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த தாஸ் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தாஸின் உயிர் சனிக்கிழமை பிரிந்தது.

தாஸின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் திரையுலகினரும், குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

மறைந்த தாஸுக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

அவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் சர்பானந்தா சொனோவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...